/* */

அரசு வேலை, திருமணம் வேண்டி நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரியில் அரசு வேலையும், திருமணம் செய்து வைக்க வேண்டி போதை இளைஞரின் தர்ணாவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு வேலை, திருமணம் வேண்டி  நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில் பரபரப்பு
X

தர்மபுரி நான்கு ரோட்டில் குடிபோதையில் கலாட்டா செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் காவேரி.

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் ஆய்வாளர் சரவணன் , போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் காவேரி (வயது 33 ) என்பது தெரியவந்தது.

காவல் துறையினரிடமும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து அப்புற படுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.

பின்னர் போதை வாலிபரை காவல்துறையினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!