/* */

தருமபுரியில் அரசு பேருந்துகள் மார்க்கம் வாரியாக இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு பேருந்துகள், மார்க்கம் வாரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தருமபுரியில் அரசு பேருந்துகள் மார்க்கம் வாரியாக இயக்கம்
X

தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல், இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு பேருந்துகள், பேருந்து நிலையங்களில் இருந்து மார்க்கம் வாரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி, தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு இன்றுமுதல், இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தருமபுரி மண்டலத்தின் மூலம் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலிருந்து கீழ்க்கண்ட மார்க்கங்களுக்கு, அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கடைசி பேருந்தாக புறப்பட்டு, எதிர் திசையில் சென்றடையும் வகையில், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் மார்க்கம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை, திருப்பத்தூர், சேலம், மேட்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் மார்க்கமாக புறப்பட்டு செல்கிறது.

அதே போன்று பென்னாகரம் பேருந்து நிலையம் தருமபுரி, மேச்சேரி மார்க்கமாக புறப்படுகிறது. பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து, தருமபுரி, ஓசூர் மார்க்கமாகவும், பொம்மிடி பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி, சேலம், ஓமலூர் மார்க்கமாகவும், அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம், தருமபுரி இயக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?