/* */

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரி பாமக போராட்டம்

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பா.ம.க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரி பாமக போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

தர்மபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக சார்பில் தருமபுரி ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

தர்மபுரி ரயில் நிலையத்திலிருந்து மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு இணைப்பு ரயில் சாலை திட்டம் 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

சென்ற மத்திய அரசு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தர்மபுரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றக்கோரி தர்மபுரி ரயில் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக மத்திய அரசு தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை புதிய ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு 8 ரயில் திட்டங்கள் 16 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், உடனடியாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன். தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Updated On: 16 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?