/* */

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்

தர்மபுரி மாவட்டஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்
X

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் கே.மணி கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

ஊராட்சிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 4 மாதம் வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிகளில் ரூ 3500 பெறும் தூய்மைக் காவலர்களுக்கு பணி பதிவேடு (எஸ்.ஆர்.) பதிவு செய்ய வேண்டும். ஊராட்சிகளில் மாதம் ஊதியம் ரூ. 250 பெறும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு 2017- ம் ஆண்டு அரசு அறிவித்த அரசாணையின்படி மாதம் ரூ.3600 வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

உள்ளாட்சியில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சி பணியாளர்களுக்கும் அரசு சட்ட சபையில் அறிவித்த கொரோனா கால ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள்,தூய்மைக் காவலர்கள்,டேங்க் ஆப்ரேட்டர்களிடம் வேலை நேரத்தை கூடுதலாக செய்ய சொல்வதுடன் அவமரியாதையுடன் நடத்தும் ஊராட்சி செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்த மாதம் கடைசி வாரத்தில் காவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சுதர்சனன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முன்னாள் மாநில செயலாளர் ரவீந்திரபாரதி, மாவட்டச் செயலாளர் சின்னக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புவனேஷ்வரி, துளசி, குப்பம்மாள், செல்லன், செல்வம் ஆறுமுகம், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...