/* */

தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தப்படம்.

தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட பொருளாளர் நல்லத் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். இதில் முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிக்கு உண்மையாகவும், திறம்பட பணியாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு கிளைக்கும் நேரடியாக சென்று நிர்வாகிகளை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

தமிழக அரசை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், மதிவாணன், விஸ்வநாதன், செந்தில்குமார், செல்வராஜ், சேகர், பசுபதி, முருகன், செல்வம், மகாலிங்கம், கோபால், வேலுமணி, செந்தில், அன்பு, தனபால், தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  7. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  8. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  9. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்