/* */

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் "கபீர் புரஸ்கார்" விருது பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் மத நல்லிணக்கத்திற்க்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும், தேசிய ஒருமைபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறப்பாக பணியற்றியர்வர்களுக்கு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022 ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்கம், தர்மபுரியில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், தர்மபுரியில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?