/* */

கடலூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியை செய்யவிடாமல் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு
X

கடலூர் அருகே நெடுஞ்சாலைப்பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.சாலை அமைப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது விளை நிலங்களை கொடுத்துள்ளனர்.

நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையும் வழங்கிய நிலையில், கடலூர் அடுத்த வழிசோதனை பாளையத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. அப்போது கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலைப்பணி நடைபெற விடாமல் தடுத்து நிறுத்தினர்.விவசாயிகள் வழங்கிய நிலத்திற்கு கூடுதல் தொகை கேட்டு தாசில்தார், மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேலும் அருகிலுள்ள கிராமங்களில் வழங்கப்பட்ட தொகை போல தங்களுக்கும் சமமான அளவு தொகையை வழங்க வேண்டும் எனவும், விளை நிலங்களில் தற்போது இப்பகுதி விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ள நிலையில் வாழைக்கு இழப்பீடு வேண்டும், சொட்டு நீர் பாசனத்திற்காக செய்யப்பட்ட செலவினையும் இதில் சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி நிறுத்தப்பட்டதால் அதிகாரிகள் ஒரு வார கால அவகாசம் கொடுத்து, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 22 Sep 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?