/* */

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர்: நிரந்தர கட்டமைப்பு வேண்டும்

கடலூர் மாவட்டத்திற்கு நிரந்தர கட்டமைப்பு வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

HIGHLIGHTS

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர்: நிரந்தர கட்டமைப்பு வேண்டும்
X

மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி

.கடலூர் சூரப்ப நாயக்கர் சாவடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ. வாசுகி செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்

தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து பிப்ரவரி 23,24 இரு நாட்கள் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றி அடைய செய்வதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட மாநாட்டில் விவாதிக்க உள்ளோம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மதவெறியை தூண்டி விடக் கூடிய பேச்சுக்கள், இஸ்லாமியர் மீது வெளிப்படையாக வன்முறையை ஏவி விடக்கடிய வகையில் நடந்துள்ளது. இது அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்க கூடியதாக உள்ளது.

மூன்று நாட்களும் இந்த பேச்சுக்கள் மாநில அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் இருக்கும் பாஜக இதற்கு அனுசரணையாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம்.

பெயரளவிற்கு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அதில் பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தருவதில்லை. அனுமதியும் வழங்குவதில்லை.

இந்த பின்னணியில்தான் தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவையும், அரசியல் கட்சிகளையும் பாதிக்கக்கூடிய விஷயம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது வாக்காளர்களின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் வருவதற்கு உதவிடும்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி தாக்கல் செய்த மசோதா நிலைக்குழு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக கல்வி, வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் வீட்டில் 21 வயதுக்குப் பிறகுதான் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் சாதாரண ஏழை எளிய பழங்குடியின மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திருமணங்கள் இந்த சட்டத்தால் சட்ட அங்கீகாரம் இல்லாமல் ஆகும் நிலை உள்ளது.

எனவே பெண்களின், கல்வி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்து பொதுமக்களிடத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு பின்னர் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவருவது தான் சரியானதாக இருக்கும்.

விலைவாசி உயர்வும், வேலையின்மையும் மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது. இது குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் மாதம் மட்டும் 68 லட்சம் பேர் மாத ஊதியம் வாங்குபவார்களின் வேலை பறி போயுள்ளது.

விலைவாசி உயர்வு கடந்த 30 ஆண்டுகளில் உள்ளதை விட அதிகம் என்று தெரிவிக்கிறது. இப்படி சாதாரண மக்கள் மீது பொருளாதார தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு குடும்பத்திற்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க முன்வர வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படுகிற மாவட்டம். இதனை எதிர்கொள்ள தடுப்பணைகள், அருவாமூக்கு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவது, ஆறு, ஏரி, குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2.27 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். அரசுத்தறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சாகுபடியாகும் விளைபொருட்களை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக வேண்டும்.

என்எல்சி உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளருக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கான வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்துவதுடன், கரும்பு விவசாயிகளின் நிலுவை பணத்தை அரசு பெற்றுத்தர நடக்க வேண்டும்.

மழை பாதிப்புக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல் வீடுகள் பொருட்கள் சேதம் அடைந்து குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் தடுப்பூசி போடுவதற்காக வேலையும் விரைவுபடுத்த வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கிலிருந்து மக்களை அப்புறப்படுதும் போது மாற்று இடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் .

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஒரு குழுவை அமைத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள், குடியிப்புகள் அப்புறப்படுத்தப்படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளோம்.

2.25 லட்சம் குடிசை வீடுகள் மாவட்டத்தில் உள்ளது. மாவட்டத்தை குடிசையில மாவட்டமாக மாற்ற ஒன்றிய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட கட்சி சார்பில் விரைவில் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளது.

கடலூர் மாவட்டம் சாதிய பாகுபாடுகள் முன்னுக்கு வரக் கூடிய மாவட்டமாக உள்ளது அரசு சார்பிலேயே பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் அதற்கான ஒரு துறையை அரசு உருவாக்க வேண்டும். மாவட்டத்தில் நுண் கடன் பிரச்சினை பெரும் பிரச்சினை உள்ளது.

பெண்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் சட்ட மீறல்களை செய்கின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு துறையை ஏற்படுத்தி நுண் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எம்.மருதவாணன, நகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 27 Dec 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!