/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: உற்சாகத்தில் மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டதில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: உற்சாகத்தில் மாணவர்கள்
X

பள்ளி மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் நேற்று கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. சமூக இடைவெளியோடு வகுப்பறையில் மாணவர்கள் அமருவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Updated On: 1 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்