/* */

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு: கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு, கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை

HIGHLIGHTS

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு:  கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை
X

செங்கல்பட்டில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை செய்யப்பட்டது.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே இராஜாஜி தெருவில் பூ விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்த மற்றும் சில்லரை விலையில் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். பூக்கள் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்படும். கடந்த வாரம் முகூர்த்த நாள் இல்லாததால் குண்டு மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.600 வரையும் மற்ற பூக்கள் விலை குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆயுதபூஜை பண்டிகை நாள் தொடங்கியதால் நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

விலை நிலவரம்

மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.600–க்கு விற்ற குண்டுமல்லி இன்று கிலோ ரூ.100 வரை உயர்ந்து ரூ.700–க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.660–க்கு விற்ற கனகாம்பரம் கிலோ ரூ.340 உயர்ந்து ரூ, 1000த்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.200–க்கு விற்ற காக்கட்டான் கிலோ ரூ.300–க்கும் விற்பனை செய்யப்பட்டது.ரூ.40–க்கு விற்ற கோழிக்கொண்டை கிலோ ரூ.80–க்கும், ரூ.40–க்கு விற்ற சம்பங்கி கிலோ ரூ.100–க்கும், ரூ,500க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ,200 அதிகரித்து ரூ,700க்கு விற்பனையாகிறது. மஞ்சள்,சிவப்பு, ஆரஞ்சு நிற ரோஜா ரூ, 240க்கும், ரூ.400–க்கு விற்றன. பட்டன் ரோஸ் கிலோ ரூ.500–க்கும், ரூ.200–க்கு விற்ற சாமந்தி கிலோ ரூ.300–க்கும், ரூ.40–க்கு விற்ற அரளி கிலோ ரூ.100–க்கும், விற்பனை செய்யப்பட்டது.

பூ விலை உயர்ந்து காணப்பட்டாலும் மார்க்கெட்டில் இன்று மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது ஆயுதபூஜை நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீசன் இல்லாததால் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிக அளவில் இல்லை என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Oct 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...