/* */

செங்கல்பட்டில் ஹலோ போலீஸ் எண் அறிவிப்பு: புதிய எஸ்.பி எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.#

HIGHLIGHTS

செங்கல்பட்டில் ஹலோ போலீஸ் எண் அறிவிப்பு: புதிய எஸ்.பி எச்சரிக்கை
X

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மாவட்டத்தில் யாரேனும் ரௌடிசத்தில் ஈடுபட்டாலோ, சட்ட விரோதமாக மணல் கடத்தல், சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, மற்றும் லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, கள்ளச்சாராயம், ஊறல், எரிச்சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அக்கரை செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் விரைந்தும், துரிதமாகவும் இருக்கும் என மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக ஹலோ போலீஸ் எண். (7200102104) என்ற எண்ணுக்கு உடன் தகவல் அளிக்களாம், தகவல் அளிப்பவர்களின் இரகசியங்கள் காக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2021 2:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு