/* */

இழப்பீடு கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மர்ம நோயல் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கிடுக! விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

இழப்பீடு கேட்டு  விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு உரிய இழ்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட நென்மேலி, காங்கேயன்குப்பம், அழகுசமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மர்ம நோயால் 300க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், குட்டிகள் இறந்து போயின, இதுகுறித்து அழகுசமுத்திரம் கால்நடைத்துறை மருத்துவமனையில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் பாதிக்கப்பட்ட வெள்ளடுகளுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய மருத்துவ முகாம் நடத்திடவும், இறந்து போன வெள்ளாடு ஒன்றுக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் முறையிட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு கால்நடைத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஏப்பரல் 26) மாலை சங்கத்தின் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளா் இ.கோதண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

இறந்த ஆடு ஒன்றுக்கு ரூபாய் 10 அயிரம் இழப்பீடுவழங்கிட வேண்டும், தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத அழகுசமுத்திரம் கால்நடை மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், கால்நடை வளர்க்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய பயிற்சி வழங்கிட வேண்டும், கால்நடைகளுக்கு தேவையான அவசர ஊர்தி வசதி செய்திட வேண்டும், செங்கல்பட்டு மாவட்ட தலைமை கால்நடை மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் மருத்துவ கருவிகளை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட செயலாளா் ஜி.மோகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளா் எம்.குமார், விவசாயிகள் சங்கத்தின் வட்ட துணைச் செயலாளா் அழகேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Updated On: 27 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?