/* */

செங்கல்பட்டு: கொலை கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் கைது

செங்கல்பட்டு: கொலை கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் கைது

HIGHLIGHTS

செங்கல்பட்டு: கொலை கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் கைது
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவரை செங்கல்பட்டு நகர போலீசார் கைது செய்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுராந்தகம் அருகே காவலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அதிகாலை 4:00 மணி அளவில் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இடங்களில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின்பேரில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற முட்ட கண்ணு கார்த்திக் மற்றும் உசேன் பாஷா என்பதும் தெரியவந்தது.



இந்த இருவரும் ஒன்று சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று மதுராந்தகத்தில் காவலாளியை கொலை செய்தது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த இருவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 19 Jun 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?