/* */

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் புதியதாக ஆக்ஸிசன் படுக்கை வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி!
X

புதிய ஆக்சிஜன் படுக்கை வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதனை பார்வையிடுகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 435 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இன்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்.

இதேபோல் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் புதியதாக 25 ஆக்சிசன் படுக்கை வசதிகள் துவக்கப்பட்டன. இதேபோல் பவுஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 ஆக்சிசன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. செய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 ஆக்சிசன் படுக்கைகளும், திருப்ப்போரூர் அரசு மருத்துவமனையில் 20 ஆக்சிஜன் படுக்கைகளும் புதிதாக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுவோர் இனி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

Updated On: 29 May 2021 8:05 AM GMT

Related News