/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள்
X

செங்கல்பட்டு மாவட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று எந்தவொரு தயக்கமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடு களை செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 703 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாக்கு மையத்தில் 7,64,731 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். செங்கல்பட்டு, மதுராந்த கம், மறைமலைநகர், மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி உள்ளி்ட்ட நகராட்சி களில் 108 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 242 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாக்கு மையத்தில் 2,20,413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் அச்சரப்பாக்கம், இடைக்கழி நாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக் கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகளில் 99 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் 91,618 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமாக 277 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 1,067 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. 10,76,762 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில், 1067 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவானது நடைபெறவுள்ளது. அவற்றில் 66 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப்பகுதிகளிலுள்ள 170 வாக்குச் சாவடிகள் மையங்களுக்கு கூடுதல் காவலர்களை நியமித்தும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், வாக்குப் பதிவு நாளான்று வாக்களிப்பவர்கள் எவ்வித தயக்கமின்றி வாக்களித்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் சாய்தள பாதை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்திட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

புகார் அளிக்க செல்பேசி எண்:

வேட்பாளர்கள் வாக்குகளுக்கு பணம் வழங்குவதை தடுத்திடவும், மேலும், மின்னனு பணப்பரிவர்த்தனை மூலமாக வாக்குகளுக்கு பணம் வழங்கு வதை தடுத்திட பொதுமக்கள் இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு 9443469162 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க லாம். மேலும், செங்கல்பட்டு மாவட்டத் தில் தேர்தல் சம்பந்தப்பட்ட புகார்களை 7200102104 என்ற தொலைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-599-7625 மற்றும் 044-27427468 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  2. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  3. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  5. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  9. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா