/* */

வியாபார பிரச்சனை, ஒருவர் காரில் கடத்தல்-4 பேர் கைது

செங்கல்பட்டு அருகே இணையதள வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மூவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கடத்தப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தை அடுத்த குமிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பாலு (29). இவருக்கும் மாமல்லபுரத்தை அடுத்த மணமை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு பார்ட்னர்களாக இணைந்து 6 லட்ச ரூபாய் முதலீடு செலுத்தி இணையதள வியாபாரம் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இணையதள வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இருவருக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக பாலுவிடம் பணம் கேட்டு சதீஷ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக பாலு பணம் தராத காரணத்தினால் ஆத்திரமடைந்த சதீஷ் , மணமை கிராமத்தைச் சேர்ந்த மைத்துனர் விக்கி(30) தலைமையிலான கூட்டாளிகள் பிரசாந்த்(19), விஷால்(22), நரேஷ்(30), உமா மகேஸ்வரன்(17) ஆகிய நான்கு பேரை அழைத்துக்கொண்டு கார் மூலம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள மைதானத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பாலுவிடம், விக்கி தொலைபேசி வாயிலாக நாம் இருவரும் இணைந்து தொழில் அமைக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பாலுவை மறைமலைநகர் நகராட்சி அருகில் உள்ள மைதானத்திற்கு வர வைத்துள்ளனர்.

பிறகு பாலு தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிலிருந்து மறைமலைநகர் மைதானத்திற்கு வந்தவுடன் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை விக்னேஷ் பிடுங்கிக்கொண்டு பாலுவின் வீட்டில் இருந்த காரை மிரட்டி எடுத்து கொண்டு விக்கி சென்றுள்ளார். மேலும் விக்கியின் கூட்டாளிகள் நான்கு பேரும் சேர்ந்து பாலுவை தாக்கி காரில் ஏற்றி மாமல்லபுரம் மார்க்கமாக கடத்திச் செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் செங்கல்பட்டு தாலுகா துணை காவல் ஆய்வாளர் கலில் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை பார்த்தவுடன் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளனர்.

உடனடியாக பாலு காவல்துறையினர் இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவர் இருந்த காரை சோதனையிட்டு, பாலுவிடம் விசாரித்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் பாலுவை கடத்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர், மறைமலைநகர் காவல்துறையிடம் மேற்படி 4 பேரையும் ஒப்படைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பாலுவிடம் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் ரூ. 39 ஆயிரம் மிரட்டி வாங்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விக்கி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் 4 பேர் மீதும் மறைமலை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Feb 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?