/* */

உலக வன நாள் தினத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வு பேரணி

உலக வன நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

உலக வன நாள் தினத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வு பேரணி
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து  உலக வன நாள் தின விழிப்புணர்வு பேரணி  புறப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் - 21 உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த உலக வன நாள் கொண்டடாடப்படுவதின் நோக்கம் உலகம் வெப்பம் அடைவதை தடுப்பதற்காக மற்றும் பல்லூயிர் பெருக்கம் நடைபெறுவதற்காகவும் ஆகும். பொதுமக்களிடையே மரம் நடுவதன் அவசியம் குறித்தும், மரம் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வன நாள் கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக வன நாளினை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் வன சரக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மரம் நடுவதன் அவசியம் குறித்தும், மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அரியலூர் பேருந்து நிலையம் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் கணேஷ், வன சரக அலுவலர் பழனிவேல், சமூக நலகாடு வனவர்கள், சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?