/* */

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் குட்கா கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் வெங்கனூர் உதவி ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் சோதனை செய்தனர்.

இலந்தைகூடம் கடைத்தெருவில் உள்ள மளிகை கடை எதிரில் ஓம்னி வாகனமொன்று சந்தேகத்திற்கு இடமாக நின்றதையடுத்து சோதனை செய்ததில் சுமார் 1,82,000/-ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் குட்கா கடத்தி திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழகண்ணுகுளம் உடையார் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் குமரவேல் (35), முசிறி தாலுகா பழம்புத்தூர் கிராமத்தில் உள்ள வெள்ளாளர் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து, ரூபாய் 1.82 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், ஆம்னி வேன் மற்றும் 1.82 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரையும் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் குட்கா மற்றும் போதைப்பொருட்களை வாங்கி விற்று வந்த செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் பாண்டியன் (36) மற்றும் குட்கா பொருட்களை பதுக்க இடமளித்த வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் ஆகியோர் தப்பியோடியதை அடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 2 Jan 2022 2:50 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  4. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  5. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  6. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  9. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  10. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?