எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம் மூலம் உணவு வழங்கல்

எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம் மூலம் உணவு வழங்கல்
X

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம்.

எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொடர்ந்து 3 நாளைக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கினார்.

எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறையில் தொடர்ந்து 3 நாளைக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்து, லட்டு அன்னதானங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து, பெருந்துறை பெத்தாம்பாளையம் பிரிவில் உள்ள விநாயகர் கோவிலில் பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ் தலைமையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொது மக்களுக்கும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, பெருந்துறை சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடமாடும் வேன் மூலம் பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு குடிநீர், நீர் மோர், வெரைட்டி ரைஸ் ஆகியவை தினசரி ஆயிரம் பேருக்கு வழங்கும் வகையில் நடமாடும் வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் அங்கிருந்த பொதுமக்களுக்கும், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் வெரைட்டி ரைஸ், நீர்மோர், தண்ணீர் பாட்டில்களை, 500 பேருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், வைகைத்தமிழ் (எ) ரஞ்சித் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.சி.பொன்னுத்துரை, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமூர்த்தி, மாணவரணி இணைச்செயலாளர் பிரபு, பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், ஒன்றிய பேரவை அவைத்தலைவர் டெய்லர் ரவி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கைலியங்கிரி குப்புசாமி, மாவட்ட பேரவை செயலாளர் சம்பத்குமார், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரொட்டி பழனிசாமி, முன்னாள் அவைத்தலைவர் டிடி ஜெகதீஷ், ஒன்றிய அவைத்தலைவர்கள் வெள்ளிங்கிரி, பாலு (எ) பாலசுப்பிரமணியம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம்.பழனிசாமி, பெத்தாம்பாளையம் பேரூர் செயலாளர் பூபாலன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பெட்டிசன் மணி மற்றும் அனைத்து சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!