/* */

அரியலூர் மாவட்டத்தில் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டம் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 343 இடங்களில் நடைபெற்றது மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் தடுப்பூசி முகாம்களில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் தடுப்பூசி முகாம்களில் 50,914 நபர்களுக்கும், நான்காம் தடுப்பூசி முகாம்களில் 33,311 நபர்களுக்கும, ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 48,8031 நபர்களுக்கும், ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில் 43,390 நபர்களுக்கும், ஏழாம் கட்ட தடுப்பூசி முகாமில் 41141 நபர்களுக்கும் என மொத்தம் 2,82,656 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 8-வது கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 1 மாவட்ட தலைமை மருத்துவமனை, 2 அரசு மருத்துவமனை மற்றும் 300 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 343 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 30,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3600 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18-வயதிற்கு மேற்பட்ட 6,17,717 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 4,65,150 (75 சதவீதம்) நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,64,666 (27 சதவீதம்) நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 10,001 (91 சதவீதம்) மாற்றுத்திறனாளிகளுக்கும், 10181 கர்ப்பணியித்தாய்மார்களுக்கும், 5982 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் தினசரி 628 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 11.11.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 நபர்களுக்க கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது 01 சதவீதத்திற்கும் குறைவாகும். அதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பு 1200 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 46 நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. இது 5 சதவீதமமாகும். ஆகையால் கொரோனா தடுப்பூசி அதிகளவில் எடுத்துக்கொண்டதால் தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், அகில இந்திய அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் சராசரி 71 சதவீதமாக இருக்கும்போது, நமது மாவட்ட சராசரி 81 சதவீதமாக உள்ளது. அகிய இந்திய அளவில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் சராசரி 22 சதவீதம் ஆக இருக்கும்போது நமது மாவட்ட சராசரி 33 சதவீதமாக உள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும், மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், தொற்று நோய் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைத்து தக்க நடவடிக்கை எடுக்க உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04329 – 228709 என்ற தொலைபேசி எண்ணிலும், அவசரகால மருத்துவ சேவை எண்.104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளம் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் வராமலும், பரவாமலும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதுடன், தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதிதெரிவித்துள்ளார்.

Updated On: 14 Nov 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?