/* */

அரியலூரில் இறந்து பிறந்த பெண் குழந்தை: கைப்பையில் கொடுத்த செவிலியர்கள்

அரியலூர் அரசுமருத்துவமனையில், இறந்து பிறந்த பெண் குழந்தை உடலை, கைப்பையில் செவிலியர்கள் போட்டு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் இறந்து பிறந்த பெண் குழந்தை: கைப்பையில் கொடுத்த செவிலியர்கள்
X

இறந்து பிறந்த சிசுவின் உடலை கைப்பையில் போட்டுத் தந்த செவிலியர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்.

அரியலூர் அருகேயுள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்; சென்னையில் சம்ஸா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில், ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்தது.

தற்போது மீண்டும் கர்ப்பமடைந்த மணிமகலைக்கு, நேற்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரவு சேர்க்கப்பட்ட மணிமேகலையை, ஒருமுறை மருத்துவர் பார்த்து சிகிச்சை செய்துள்ளார். அதன்பின்னர், பிரசவவலி ஏற்பட்ட மணிமேகலை, மருத்துவர்களோ, செவிலியர்களோ வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மணிமேகலைக்கு பெண் குழந்தை தானாக பிறந்து வெளியே வந்துள்ளது. தொப்புள்கொடியை, மணிமேகலைக்கு அருகில் இருந்த ஒரு பெண் பிரித்துள்ளார். குழந்தை, இறந்த நிலையில் தாய் மணிமேகலைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதேநேரம், ஆசை ஆசையாக பிறந்து கையில் ஏந்த வாசலில் காத்திருந்த தந்தை சேகரிடம், இறந்த குழந்தையை பையில் போட்டு செவிலியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயல், உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவ்வாறு அலட்சியமாக செயல்படுவதாக, உரிய முறையில் சிசுவின் உடலை தராமல் இப்படி செய்தது அதிர்ச்சி தருவதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 9 Oct 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?