/* */

அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு, முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா
X

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் மரியாதை செய்தார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில், அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தாமரைக்குளம் ஊராட்சி தலைவர் பிரேம்குமார், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற புதிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று அரியலூரில் உள்ள 18 வார்டுகளிலும், அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Updated On: 25 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...