/* */

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில்  வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறுத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாவட்டங்களில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் பணிகளின் தற்போதைய நிலை போன்றவற்றை ஆய்வு செய்து, வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களை முழுவதுமாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அமிர்தகுளம் இயக்கத்தின் கீழ் பாரத பிரதமர் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்ட ரூ.7.26 இலட்சம் மதிப்பீட்டில் சடையப்ப படையாச்சி ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் பணியினையும், மேலக்கருப்பூர்-பொய்யூரில் மருதையாறு ஆற்றில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணியினையும், அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புறம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருசுக்குட்டை மேம்பாட்டு பணியினையும், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சின்னப்பட்டாக்காடு ஏரியில் வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ரூ.30,900/- மதிப்பீட்டில் வண்ணாங்குளம் தூர் வாரப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகளில் முழுப் பணிகளையும் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே விரைவில் முடித்து, மழைநீர் தங்குதடையின்றி செல்லவும், இருசுக்குட்டையினை மழைக்காலத்திற்கு முன்பாவே தூர் வாரி மேம்படுத்தவும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சரியான நேரத்தில் தரமாக செய்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுடன், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு விடுபடாமல் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார்.

Updated On: 19 Aug 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு