/* */

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

World Rabies Day -இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி இன்று தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்
X

அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ. ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார்

World Rabies Day -அரியலூர் மாவட்டம், அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி இன்று தொடங்கி வைத்தார்.

வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறி நோய் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன் முதலில் வெறி நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்த வேதியலாளர் மற்றும் நுண்ணுயிரியல் துறை வல்லுநருமான லூயிஸ் பாஸ்டர் நினைவு தினமான செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறி நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, இன்றைய தினம் அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மற்றும் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்ட மனிதர்களை பாதுகாக்க செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். உலக அளவில் 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாக வெறி நோயை முழுவதுமாக ஒழிப்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களில் 99 சதவீத வெறி நோய் பாதிப்புகள், வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மூலமாகவே எற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 60,000-க்கும் அதிகமான வெறி நோய் இறப்புகள் மனிதர்களில் எற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாRabies Vaccination Camp Newsய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் வெறி நோய் பரவலை தடுக்க முடியும்.

கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 3,16,510 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் அரியலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள்; போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறியச் செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளா திருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும்.

மேலும், இம்முகாமில் மாவட்ட காவல் துறையினை சேர்ந்த நான்கு மோப்ப நாய்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. எனவே, இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமில் பொது மக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறை யுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இம்முகாமில், கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ஹமீதுஅலி, நகராட்சி ஆணையர் சித்ராசோனியா, வட்டாட்சியர் கண்ணன், கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Sep 2022 9:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்