/* */

அரியலூரில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாமினை அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்கான   சிறப்பு முகாம்
X

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ஒ.கூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (04.09.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அப்பணி 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் ஒ.கூத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களுக்கு முகாம் குறித்து அறியும் வண்ணம் அறிவிப்பு செய்திடவும், பள்ளி வளாகத்தில் முன்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினைதாமாகவே முன்வந்து இணையவழியில் வாக்காளர் எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ந-சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (NVSP) (https://www.nvsp.in), வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (VHA)> (https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en), வோட்டர்ஸ் போர்ட்டல் (https://voterportal.eci.gov.in) இதில் ஏதேனும் ஒரு செயலியினை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து "இ"சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 Sep 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்