/* */

அரியலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள்

அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர், 9 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள்
X

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் செந்துறை ஒன்றியம் கீழமாளிகை (வார்டு 4) ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பானுப்பிரியா, ஜெயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை (வார்டு 10) ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெங்கடேஸ்வரன், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் (வார்டு 8) ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பூராசாமி மற்றும் நாகம்பந்தல் (வார்டு 6) ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜோதி ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், 9 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் என மொத்தம் 12 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெற்றது.

பதிவான வாக்குப்பெட்டிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு மூண்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. 24மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று 12பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஆறு ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர் பழனிவேல் 522 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர் ராசாராம் 1449 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் உட்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு குமாரி 1050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அரியலூர் ஒன்றியம் ஓட்டக்கோவில் (வார்டு 6), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் ராமலிங்கம் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் (வார்டு 6), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் ராஜீவ்காந்தி 323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருமானூர் ஒன்றியம் கோவிலூர் (வார்டு 1), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் அலெக்ஸாண்டர் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செந்துறை ஒன்றியம் தளவாய் (வார்டு 9), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் ராஜேஸ்வரி 182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூர் (வார்டு 3), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் லெனின் 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஜெ.தத்தனூர் (வார்டு 5), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் நந்தினி 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆண்டிமடம் ஒன்றியம் இடையக்குறிச்சி (வார்டு 2),ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் பாண்டியன் 240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் (வார்டு 9), ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் நீலமேகம் 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் (வார்டு 8) ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் நிர்மலா 104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 12 Oct 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்