/* */

கொரோனா சிகிச்சை : ஸ்ரீரமேஷ் சந்த் மீனா நேரில் ஆய்வு

கொரோனா சிகிச்சைக்காக தேவையான அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசனை

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை : ஸ்ரீரமேஷ் சந்த் மீனா நேரில் ஆய்வு
X

கொரோனா வைராஸ் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக தேவையான அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசனை

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சை வசதிகளுக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திடீர்குப்பம் ஆதிதிராடவிர் மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கழுவந்தோண்டி ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்டவைகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வின்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்கள்.

தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்பட்டுத்தும் நோக்கிலும், கொரோனா வைராஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்கைகளுக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா வைரஸால் குறைந்த அளவு பாதிப்படைந்த நபர்களின் வசதிகளுக்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெருகி வரும் கொரோனா நோய் தொற்றாளர்களின் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள். மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில்சிறப்பு சிகிச்சை மையம் போர்கால அடிப்படையில் அமைப்பதற்கு தேவையான கழிவறை வசதிகள், மின்வசதிகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து, செந்துறை, திடீர்குப்பம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள 41 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், செந்துறை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக தேவைப்படும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் போர்கால அடிப்படையில் நிறைவேற்றிடவும், கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கழுவந்தோண்டியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினை ஆய்வு மேற்கொண்டு, ஜெயங்கொண்டம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைராஸ் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக தேவையான அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்ந ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) திருமால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி, உதவி பொறியாளர் தேவேந்திரன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி (அரியலூர்), ஆனந்த் (ஜெயங்கொண்டம்), குமரய்யா (செந்துறை), நகராட்சி ஆணையர்கள் மனோகரன் (அரியலூர், சுபாஷினி (ஜெயங்கொண்டம்), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Updated On: 15 May 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...