/* */

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியிட போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியிட  போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
X

தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெறும் மாணவ- மாணவிகள்.

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படைப்பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3261 பல்வேறு பணிக்காலியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்-தரம் -1 மற்றும் கணினி பயிற்றுநர் தரம்-1 ஆகிய பணிக்காலியிடங்களுக்குwww.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வுகளும் 07.10.2021 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டல் மையத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் அல்லது 04329-228641 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எனவே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 3:53 AM GMT

Related News