/* */

அரியலூர் அருகே பயோ டீசல் என போலி டீசலை விற்கவந்த லாரி சிறைபிடிப்பு

அரியலூர் அருகே கீழப்பழுவூரில் போலி டீசல் விற்பனை செய்ய வந்த டேங்கர் லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே பயோ டீசல் என போலி டீசலை விற்கவந்த லாரி சிறைபிடிப்பு
X

கீழப்பழுவூரில் போலி டீசல் லாரியை பங்கு உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.


அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் தனியார் லாரி சர்வீஸ் கம்பெனிக்கு பயோடீசல் என்ற பெயரில் டீசலை விற்பனை செய்வதாக சிலர் முயற்சித்துள்ளனர். திருச்சி சரகம் பெட்ரோலியம் டிலர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர் இந்த டீசல் போலியானது என்று முன்பே அரியலூர் பங்கு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்திருந்தினர்.

இதனையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து வந்த டீசல் லாரியை பங்கு உரிமையாளர்கள் சிறைபிடித்தனர். பெட்ரோலியம் டிலர்ஸ் அசோசியேஷன் திருச்சி சரகம் சங்கம் சார்பில் கீழப்பழுவூர் போலீசாரிடம் புகாரளித்ததையடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலி டீசல் விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள சூழ்நிலையில், இது போன்ற போலி டீசல் லிட்டருக்கு 15 ரூபாய் குறைவாக கொடுக்கப்படுவதால் அரசிற்கு பொருளாதார இழப்பும் ஏற்படும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த டீசலை பயன்படுத்தினால் வாகனங்களுக்கு பழுது ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 28 Aug 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?