/* */

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி: மாணவர்கள் வருகை முக அங்கீகார பதிவு அறிமுகம்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்கள் வருகை முக அங்கீகார பதிவு கைபேசி செயலியினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி: மாணவர்கள் வருகை முக அங்கீகார பதிவு அறிமுகம்
X

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவர்கள் , பணியாளர்களின் வருகையினை பதிவு செய்திடும் கைபேசி செயலியினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் பதிவு செய்திடும் கைபேசி செயலியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபொழுது அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைபேசி செயலியினை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் பதிவு செய்திடும் கைபேசி செயலியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்த முக அங்கீகார முறையில் பதிவு செய்திடும் கைபேசி செயலி மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது. இதன் பயனாக பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை இனி முக அங்கீகார முறையிலேயே இந்த கைபேசி செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் இச்செயலி மூலம் பதிவு செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Aug 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...