/* */

அரியலூரில் பொன்னார் வாய்க்கால் தூர்வாரும் பணி : மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு

அரியலூரில் பொன்னார் வாய்க்கால் தூர் வாரும் பணியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் பொன்னார் வாய்க்கால் தூர்வாரும் பணி : மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு
X

அரியலூரில் ரூ 1 கோடியே 5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பொன்னார் வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் ரத்னா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், குருவாடி கிராம எல்லையில் பொன்னார் பிரதான வாய்க்கால் கொள்ளிடம் இடது கரையில் ஆரம்பமாகி வேம்புகுடி கிராமத்தில் முடிவடைகிறது.

பொன்னார் பிரதான வாய்க்காலுக்கு நீர்வரத்து மேட்டுர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டு, காவிரிக்கு வந்தடைந்து, பின்பு கல்லணையில் திறக்கப்பட்டு கொள்ளிடம் மூலமாக பாசனம் இக்கால்வாயில் நடைபெறுகின்றது.

பொன்னார் பிரதான வாய்க்கால் மற்றும் அதன் 8 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 69.53 கிலோமீட்டர் மூலம் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 5 ஏரிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 4 சிறிய ஏரிகளும் பயனடைகின்றன.

மொத்தம் 4694 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதால் 7700 விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த பாசன வாய்க்கால் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகின்றது. தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் த.ரத்னாநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 2 Jun 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...