/* */

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

HIGHLIGHTS

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
X

குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட கண்ணன் @ கந்தசாமி.


லாட்ஜ் ஓனர்



அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உடந்தையாக செயல்பட்டவர்கள், பாலியலில் ஈடுபட்டவர்கள், லாட்ஜ் ஓனர், லாட்ஜ் மேனேஜர் என 12 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க லாட்ஜ் ஓனர் கண்ணன் என்ற கந்தசாமி (45) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்குமாறு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி சிறுமி பாலியல் தொழிலுக்கு தனது விடுதியை பயன்படுத்திய கண்ணன் @ கந்தசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இன்று திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான ஆவணங்களை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சமர்ப்பித்தனர்.

Updated On: 23 April 2022 2:26 PM GMT

Related News