/* */

அரியலூர் : குரூப் 2 தேர்வினை 11471 நபர்கள் எழுதினர்

அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களிலும் 47 தேர்வுக் கூடங்களில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் : குரூப் 2 தேர்வினை 11471 நபர்கள் எழுதினர்
X

குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள். 

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II & IIA தேர்வுகள் இன்று (21.05.2022) நடைபெற்றது. அரியலூர் கோட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் இராதாகிருஷ்ணன், உடையார்பாளையம் கோட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவிப்பிரிவு அலுவலர் ராமச்சந்திரன் பார்வையாளராக நியமிக்கப்பட்டு, தேர்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II & IIA தேர்வுகள் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஆகிய 4 வட்டங்களிலும் 47 தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் மொத்தம் 13,122 தேர்வாளர்களில், 11,471 தேர்வாளர்கள் வருகை புரிந்துள்ளனர். 1651 நபர்கள் தேர்வு எழுத வருகை புரியவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்வினை கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்களும், 8 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 80 ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர், ஆயுதம் ஏந்திய காவலர்களும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
Updated On: 21 May 2022 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு