வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
X

Erode news- வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவர்களை, கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் மற்றும் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.

Erode news- வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாராட்டி கவுரப்படுத்தப்பட்டனர்.

Erode news, Erode news today- வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாராட்டி கவுரப்படுத்தப்பட்டனர்.

ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையில் (பி.எஸ்சி.கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) பயின்ற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வேலைவாய்ப்புத் துறையின் மூலம் உலகிலேயே அதிகமான உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடான டிரானாவில் உள்ள புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான பூகேன்வில்லா பே ரிசார்ட் மற்றும் ஸ்பா-வில் 15 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மேலும், வருடத்திற்கு ரூ.4,00,000 ஊதியத்துடன் அங்கு செல்வதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டு, தங்குமிடம் மற்றும் உணவு போன்றவற்றை மேற்கூறிய நட்சத்திர ஓட்டல் நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொண்டு நமது மாணவர்களுக்குப் பணியில் சேருவதற்கான பணி நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளனர். வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவர்கள், கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் மற்றும் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றனர்.

மேலும், தற்போது பயின்று கொண்டிருக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் துறையின் வாயிலாக பகுதி நேரமாக ஈரோட்டில் உள்ள தலைசிறந்த ஓட்டல்களில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஸ்காட்லாந்து, அமெரிக்கா, மலேசியா, மாலத்தீவு, துபாய், அபுதாபி, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிகிறார்கள்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story