/* */

அரியலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.09.2022 அன்று நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓவ்வொரு ஆண்டும் முன்னாள் காலஞ்சென்ற தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கு அண்ணா மிதி வண்டிப்போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.09.2022 அன்று 7.00 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்படும். (13 வயதிற்குட்பட்டவர்கள்-01.01.2010, 15 வயதிற்குட்பட்டவர்-01.01.2008, 17 வயதிற்குட்பட்டவர்-01.01.2006 அன்றோ அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.) போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும், சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது, மாணவ, மாணவியர் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழ்களுடன் வந்தடைதல் வேண்டும். வயது சான்றிதழ் பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து பெற்றுவருதல் வேண்டும். மற்றும் தங்களது ஆதார் அட்டை ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கவேண்டும். மிதிவண்டிப்போட்டிகளில நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

சைக்கிள் போட்டியின் தொலைவு விவரங்கள் :- 13-வயதிற்குட்பட்டவர்கள் மாணவர்கள் 15கி.மீ, மாணவியர்கள் 10கி.மீ, 15-வயதிற்குட்பட்டவர்கள் மாணவர்கள் 20கி.மீ, மாணவியர்கள் 15கி.மீ, 17-வயதிற்குட்பட்டவர்கள் மாணவர்கள் 20 கி.மீ, மாணவியர்கள் 15கி.மீ.

சைக்கிள் போட்டிகள் நடைபெற இருக்கும் தடங்கள் 15.09.2022 அன்று போட்டிகள் நடைபெறும் முன்பு தெரிவிக்கப்படும். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.5000/-, ரூ.3000/- மற்றும் ரூ.2000/- வீதமும் 4 முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250/- வீதம் பரிசுத்தொகையினை காசோலையாக வழங்கப்படஉள்ளது.

ஆதலால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் வயது சான்றிதழ்களுடன் வருகை தந்து போட்டிகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை கைபேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Sep 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு