/* */

288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

அரியலூர் மாவட்ட 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
X

அரியலூர் மாவட்டத்தில் நிரம்பியுள்ள நீர்நிலை

வடகிழக்கு பருவமழையின் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் 6 சதவீதம் மழைப்பொழிவு கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 01.10.2021 முதல் 613.38 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 2477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 90 சதவீதத்திற்கு மேல் 129 ஏரி, குளங்களும், 80 சதவீதத்திற்கு மேல் 532 ஏரி, குளங்களும், 70 சதவீதத்திற்கு மேல் 701 ஏரி, குளங்களும், 50 சதவீதத்திற்கு மேல் 616 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்கு மேல் 196 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்குள் 15 ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன. முழு கொள்ளளவை எட்டியுள்ள நீர்நிலைகளில் மழைநீரினை பாதுகாப்பு கருதி உபரிநீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.

226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்தேக்கத்தில் தற்பொழுது 211.05 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்சமயம் வினாடிக்கு 256 கனஅடி நீர் நீர்தேக்கத்திற்கு வருகிறது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போதை வரை 94.50 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு 73 கனஅடிநீர் நீர்தேக்கத்திற்கு வருகிறது.

இரண்டு ஏரிகளிலும் நீர் வெளியேற்றம் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் தேக்கத்திற்கு வருகை தரும் மழைநீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்தேக்கத்திற்கு அதிகபடியான மழைநீர் வரும் பட்சத்தில் அதனை வெளியேற்றிடவும், பலவீனமான இடங்களில் மணல் மூட்டைகள் அடக்குவதற்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் அதிக நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் உள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 21 Nov 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!