/* */

2,32,646 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது

அரியலூர்: அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைரூ.2000/- மாவட்ட கலெக்டர் த.ரத்னா வழங்கினார்.

HIGHLIGHTS

2,32,646 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது
X

கொரோனா நிவாரணத் தொகை 2,32,646 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.46,52,92,000/-

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைரூ.2000/-யினை மாவட்ட கலெக்டர் த.ரத்னா வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அரசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை முதல் தவணையாக ரூ.2000/- வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அரசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா வழங்கி, தொடங்கி வைத்தார்கள். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், கொரோனா நோய் தொற்றுக் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பொதுவிநியோகத் திட்ட அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்கள். அதனடிப்படையில், நடப்பு ஆண்டு மே மாதத்தில் முதல் தவணையாக ரூ.2000/- கொரோனா நிவாரண நிதி வழங்ககும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக 2,32,646 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.46,52,92,000/- வழங்கப்படவுள்ளது. அதன்படி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, எந்த தேதி மற்றும் நேரத்தில் நியாயவிலைக்கடைகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் த.ரத்னா கொரோனா நிவாரண தொகையை வழங்கி பேசுகையில், கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2000/- குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். கொரோனா தொற்றிலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு 2 மீட்டர் இடை வெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண உதவித் தொகையை பெற்றுச் செல்ல வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித் தொகை விநியோகத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள வட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதிகளில் முககவசம் அணிந்து. சமூக இடைவெளியினை பின்பற்றி தங்களுக்குரிய கொரோனா நிவாரண நிதியினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர் ஏழுமலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வ.சி.கோமதி, துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


#instanews #tamilnadu #ariyalur #Collector # Reliefamount #corona #covid19 #lockdown #stayhome #staysafe #fund

Updated On: 13 May 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!