மகிமை எனும் மந்திர சக்தி நிறைந்த 'ஓம் நம சிவாயா' மந்திரம்..!
![மகிமை எனும் மந்திர சக்தி நிறைந்த ஓம் நம சிவாயா மந்திரம்..! மகிமை எனும் மந்திர சக்தி நிறைந்த ஓம் நம சிவாயா மந்திரம்..!](https://www.nativenews.in/h-upload/2022/08/19/1579554-sivaa.webp)
om namah shivaya tamil-சிவபெருமான். (கோப்பு படம்)
om namah shivaya tamil-மன வேதனைகள்,மனக்கவலைகள் மாயமாகிப்போகும். எந்த துன்பத்தையும் நீக்க வல்ல 'ஓம் நம சிவாயா' என்ற வார்த்தையை மனதில் இருத்தி சொல்லிப் பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வமான நேர்மறை அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
இந்த நாமம், ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளிக் கொணரும் பிராண நாமம். 'ஓம் நம சிவாயா' இது வேதத்தின் உயிர்நாடி. நம்மை புனிதப்படுத்தும் அழகோசை. நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது வாழ்வின் உண்மை.
'ஓம் நம சிவாயா' நான் 'சிவபெருமானை வணங்குகிறேன்' என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளன. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லிப் பழகுவது நேர்மறை அலைகளை நிலைநிறுத்தும்.
ந-நிலம், ம-நீர், சி-அக்னி, வா-காற்று, ய-ஆகாயம் என பொருள்படுகிறது. சிவன் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் உட்கருவான சிவனின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த உட்கருவில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் 'நம சிவாய'.
- இது விஞ்ஞான ரீதியான தியானம்.
- கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
- 'ஓம்' என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சையில் பயிற்சியாக அளிக்கப்படுகின்றது.
- 'ஓம்' என்ற நாம சொல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu