unhealthy biscuits-பிஸ்கட் குழந்தைகளுக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கங்க..!
![unhealthy biscuits-பிஸ்கட் குழந்தைகளுக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கங்க..! unhealthy biscuits-பிஸ்கட் குழந்தைகளுக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கங்க..!](https://www.nativenews.in/h-upload/2023/05/20/1717521-biscuits.webp)
unhealthy biscuits-பிஸ்கட் குழந்தைகளுக்கு நல்லதா? (கோப்பு படம்)
பிஸ்கட் இன்னிக்கு இல்லீங்க பல காலமாக நாம் சாப்பிட்டு வருகிறோம். குழந்தைகள் அழுதால் உடனே ஒரு பிஸ்கட்டை கையில் கொடுத்தால் போதும். அதை வாயில் வைத்து கடித்து அழுகையை நிறுத்திவிட்டு சாப்பிடுவார்கள்.
டீ குடிக்கும்போது பெரும்பாலான வீடுகளில் இணைப்பாக சாப்பிடுவது பிஸ்கட் தான். அந்த பிஸ்கட் சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லதா..? குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுக்கலாமா என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க. பிஸ்கட் உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆரோக்ய நிபுணர்கள்.
unhealthy biscuits
ஆரோக்யமற்றது
ஏனெனில், உண்மையில் பிஸ்கட் தயாரிப்பதற்கு சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்யமானது அல்ல.
பொதுவாகவே பிஸ்கட்டுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தப்பட்டது) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி பிரச்னையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது எடுத்துக்கொள்கிறது.
unhealthy biscuits
பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகள் ஒரேசமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. அதனால் மற்ற உணவுகளை குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் கூடுதல் ஆபத்தானவைகள்.
கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்கள். அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் சர்க்கரை, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடலிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
உப்பு பிஸ்கட்
உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.சிலர் குழந்தைக்கு பாலுடன் பிஸ்கட்டுகள் சேர்த்து சாப்பிடக்கொடுப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அதை சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமான நிலையில் இருப்பார்கள். இதனால் செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.
unhealthy biscuits
சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
எனவே, குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக்கொடுப்பதே ஆரோக்யத்தை கொடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
படம் - நன்றி : Dreamstime.com
அளவாக உண்பது அவசியம்
பிஸ்கட் குழந்தைகளுக்கான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் ஆரோக்யமான, தரமான பிஸ்கட்டுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம். பிஸ்கட்கள் சில ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் என்றாலும், வணிக ரீதியாக கிடைக்கும் பல பிஸ்கட்களில் சர்க்கரை, ஆரோக்யமற்ற கொழுப்புகள் மற்றும் பிற ரசாயன சேர்க்கைகள் அதிகம் உள்ளன.
unhealthy biscuits
பாதிப்புகள் ஏற்படும்
சர்க்கரை பிஸ்கட்களை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, பல் சிதைவு மற்றும் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். அவை குழந்தையின் உணவில் இருந்து அதிக சத்தான உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை குறைத்து ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu