/* */

எடையைக் குறைக்க ஆளி விதையை எந்தெந்த முறைகளில் சாப்பிடுவது நல்லது?

How to Eat Flax Seeds in Tamil-பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிதான, அதே நேரம் உடலுக்குத் தேவையான நார்சத்துகளுடன், பல சத்துகளும் ஆளி விதையில் நிறைந்திருக்கிறது.

HIGHLIGHTS

How to Eat Flax Seeds in Tamil
X

How to Eat Flax Seeds in Tamil

How to Eat Flax Seeds in Tamil

ஆளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதை முறையாக எடுத்துக் கொண்டால் நீங்கள் நினைத்தபடி உங்களால் எடையைக் குறைக்கவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் எந்தெந்த முறைகளில் இந்த ஆளி விதையை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

வெறும் 1 ஸ்பூன் ஆளி விதையில், கிட்டதட்ட 7 கிராம் அளவுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்துக்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. ஆயுர்வேத மருந்து தயாரிப்பிலும் இந்த ஆளி விதைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதிலுள்ள அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஆளி விதையில் அதிக அளவில் நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்திருக்கிறது. உணவு இடைவெளிகளில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக இந்த ஆளி விதையை எடுத்துக் கொண்டால், இது தேவையற்ற நொறுக்குத் தீனி சாப்பிடுவதையும் அதிகப்படியான பசியையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் ஆரோக்கியமற்ற உணவை தேடுவது கட்டுக்குள் இருக்கும்.

மெட்டபாலிசமும் முறையாக நடக்கும். எடையைக் கட்டுக்குள் வைக்கும் ஹார்மோன்கள் முறையாகச் செயல்படும்.

2.5 கிராம் அளவுக்கு ஆளி விதையை எடுத்துக் கொண்டாலே தேவையற்ற அதிக பசியையும் நொறுக்குத் தீனி மீதான ஆர்வமும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆளி விதையை பல்வேறு வகைகளில் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிட்டால் அதனுடைய முழு ஊட்டச்சத்துக்களும் உடலில் சேரும் வகையில் எடுத்துக் கொண்டால் தானே பலன் முழுமையாகக் கிடைக்கும். அதில் ஒன்று தான் இந்த ஆளி விதை பானம்.

பானம் தயாரிக்கும் முறை

  • ஒரு கப் தண்ணீர்
  • 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை
  • 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்

செய்முறை

தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி, அதில் ஆளி விதையைப் போட்டு 2-3 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த பானத்தை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஆளி விதை பானம் 5 நிமிடங்களில் தயார்.

இந்த பானத்தை காலை எழுந்ததும் குடித்து வர விரைவாக நீங்கள் நினைத்தபடி எடையைக் குறைக்க முடியும்.

கஷாயம், பானம் போல குடிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கஞ்சி, சூப் என எவற்றில் வேண்டுமானாலும் இந்த பொடியை போட்டு சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு இந்த விதையைச் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது கலோரிகளை எரிப்பதற்காக உடலில் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். அதனால் அளவோடு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இந்த விதையைச் சாப்பிடும் காலங்களில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ஆளி விதைகளை பொடிக்காமல், அரைக்காமல் முழுதாக அப்படியே சாப்பிடும் பட்சத்தில் அவற்றை முழுமையாக மென்று சாப்பிட முடியாது. அப்படி முழுமையாக அரைத்து சாப்பிடவில்லை என்றால் ஆளி விதையின் பலன்கள் கிடைக்காது என்பதால் பெரும்பாலும், அரைத்தோ, ஊறவைத்தோதான் உண்ண வேண்டும். ஆளி எண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம். ஆனால் அதிகமாக சூடுபடுத்தக் கூடாது என்பதால் சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொண்ட ஆளிவிதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்தப் பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிதான, அதே நேரம் உடலுக்குத் தேவையான நார்சத்துகளுடன், பல சத்துகளும் ஆளி விதையில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில், மிகச் சிறிய அளவே தின உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 March 2024 9:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?