/* */

உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் சமையலறை எங்கு உள்ளது தெரியுமா?

உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் சமையலறை எங்கு உள்ளது என்பதை அறிய இந்த கட்டுரையை படிக்க தொடர்ந்து படிக்கலாம்.

HIGHLIGHTS

உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் சமையலறை எங்கு உள்ளது தெரியுமா?
X

அம்ரிட்சர் பொற்கோவில்.

'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்ற வாக்கியங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர் இராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூரில் அவதரித்த அவர் இந்த உலகில் பசிப்பிணி மட்டுமே தீர்க்க முடியாத நோய் என்பதை உணர்ந்து மக்களின் பசியை போக்குவதற்காக அணைக்க முடியாத அடுப்பின் மூலம் சமையல் செய்து பசியில் வாடிவோர்களுக்கு எல்லாம் தனது வாழ்நாள் முழுவதும் வழங்கினார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும் கூறினார். பசிப்பிணியை போக்குவதற்காகவே அவதாரம் எடுத்த வள்ளலார் இறுதியாக ஜோதியில் ஐக்கியமானார். வள்ளலாரின் வரலாறு ஒரு தனி கதை. தமிழகத்தில் அவர் ஏற்றி வைத்து அடுப்பு இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் இங்கு பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல நாட்டின் வளமான பஞ்சாப் மாநிலத்திலும் ஒரு கோவிலில் உணவு வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடரலாம். பஞ்சாப் மாநிலம் அம்ரித்ஸர் நகரில் உள்ளது பொற்கோவில். இது சீக்கியர்களின் புனித தலமாக இது கருதப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே இரவு பகலாக மிகப் பிரமாண்டமான சமையலறை இயங்குகிறது. உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் சமையலறை ஒன்று உண்டென்றால் அது இந்த பொற்கோவில் சமையலறையாக தான் இருக்கும். இங்கு சுழற்சி முறையில் உணவு தயாரிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள். சீக்கியர்களின் மூன்றாவது மத குருவான அமிர்தாஸ் ஜி இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தான் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஒவ்வொரு வாரமும் ஒரு சீக்கிய குடும்பமும் அல்லது பல குடும்பங்களோ சேர்ந்து உணவுக்கான செலவுகளை ஏற்கிறார்கள். இதற்காக அவர்கள் வெளியில் இருந்து எந்த உணவையும் சமைத்துக் கொண்டு வந்து பரிமாறுவதற்கு அனுமதிப்பதே இல்லை .

பொற்கோவில் என்றால் அது சீக்கியர்களின் புனித தலம் அந்த கோவில் முழுவதும் தங்கமாக தான் இருக்குமோ என நாம் நினைப்போம். ஆனால் அது உண்மை அல்ல. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஒரு கோவிலை காண தவறுவதில்லை.

தானங்களில் எல்லாம் சிறந்தது அன்னதானம் என சொல்கிறார்கள் மகாபாரதத்தில் வீர புருஷன் கர்ணன் கொடை வள்ளல் என போற்றப்படுகிறான். கர்ணன் தனது ஆட்சி காலத்தில் யாருக்கும் இல்லை என்று சொன்னது இல்லையாம். பொன், பொருள், நகை நட்டு என இடம் இருந்ததை எல்லாம் நாட்டு மக்களுக்கும் ஏழைகளுக்கும் வாரி வழங்குவதிலேயே தனது செயலாக வைத்திருந்தான். ஆனால் அதே கர்ணன் மகாபாரத போரில் வீர மரணம் அடைந்து சொர்க்கத்தை அடைந்தபோது அவனுக்கு பசி அடங்கவில்லையாம்.அதற்கு காரணம் பூலோகத்தில் அவன் வாழ்ந்த போது என்னதான் தான தர்மங்கள் செய்து கொடைவள்ளல் என பெயர் எடுத்து இருந்தாலும் அவன் பசித்தோருக்கு உணவு வழங்கும் அன்னதானத்தை செய்யவில்லை என்று புராண வரலாறு கூறுகிறது.அதன் காரணமாகத்தான் இன்று பல கோவில்களில் அன்னதானம் வழங்குவதை பிரதானமாக வைத்திருக்கிறார்கள்.


சரி இனி மேட்டருக்கு வருவோம்.

பொற்கோவிலில் 24 மணி நேரமும் எரியும் அடுப்புடன் எவ்வாறு சமையல் செய்கிறார்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறையை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பதை கீழே பார்ப்போம்.

பொற்கோவிலில் தினமும் 1500 கிலோ அரிசியில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதோடு பன்னிரண்டாயிரம் கிலோ கோதுமை மாவில் ரொட்டியும் தயாரிக்கிறார்கள்.

2000 கிலோ காய்கறிகளைக் கொண்டு கூட்டும், 13 ஆயிரம் கிலோ பருப்பு கொண்டு குழம்பும் தயார் செய்கிறார்கள். தவிர ஐந்தாயிரம் லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் கொண்டு கீர் எனப்படும் இனிப்பு தயார் செய்கிறார்கள்.

பொற்கோவில் சமையல் அறையில் தினமும் 2 லட்சம் ரொட்டிகள் சுட்டு எடுக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் ரொட்டிகளை சுட்டெடுக்கும் இயந்திரம் இங்கு உள்ளது.

சமையல் செய்வதற்காக தினமும் 100 கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு ஐந்தாயிரம் கிலோ அடுப்பு கரியும் பயன்படுத்தப்படுகிறது. சமையல் பணியில் மட்டும் 450 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்.

அவர்களோடு ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்களும் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். உணவு எல்லாம் மிகப்பெரிய அண்டாக்களில் தயார் செய்யப்படுகிறது. இங்கு இரண்டு உணவு கூடங்கள் இருக்கின்றன .ஒவ்வொரு உணவு கூடத்திலும் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும்.


சரி சாப்பாடு தயார் செய்தாச்சு நீ அதை எப்படி பரிமாறுவது என கேட்கிறீர்களா? நம்ம ஊர் என்றால் இலை போட்டு சாப்பாடு போடுவது தான் கோவில்களில் அன்னதானம் வழங்கும் நடைமுறை.

ஆனால் பஞ்சாப் பொற்கோவில் அப்படி அல்ல. இங்கு உணவு வழங்குவதற்காகவே மூன்று லட்சம் சாப்பாடு தட்டுகள் மற்றும் தம்ளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை பக்தர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவற்றை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த தன்னார்வ தொண்டர்கள் சேவாதர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பொற்கோவிலை பொறுத்த வரை முழுவதும் சைவ உணவு தான் அசைவத்திற்கு அங்கு வேலையே இல்லை. உணவு கட்டுப்பாடும் கிடையாது பசி என்று வருபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி எந்த நாட்டினராக இருந்தாலும் சரி மூன்று வேளையும் வயிறார உண்ண முடியும் சரி பொற்கோவில் உணவு எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசைப்படுகிறீர்களா அதன் சுவை அறிய வேண்டுமானால் ஒரு கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

Updated On: 22 Sep 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்