/* */

பத்து தல டீசர், டிரைலர், இசை வெளியீடு எப்போது? இதோ வந்துடிச்சி அப்டேட்!

பத்து தல படத்தின் கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கி விட்டன. முதல் பாடல் வெளியான முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறது.

HIGHLIGHTS

பத்து தல டீசர், டிரைலர், இசை வெளியீடு எப்போது? இதோ வந்துடிச்சி அப்டேட்!
X

பத்து தல படத்தின் போஸ்டரில் சிம்பு, கௌதம்

பத்து தல படத்தின் கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கி விட்டன. முதல் பாடல் வெளியான முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறது. மாநாடு , வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இப்போது பத்து தல படம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்துக்கு பிறகு சிம்பு நடித்து வரும் படம் பத்து தல. இந்த படம் கன்னட மொழியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். வரும் மார்ச் மாதம் 30ம் தேதி படம் ரிலீசாக காத்திருக்கிறது.

சிம்பு கேங்ஸ்டராகவும் கௌதம் கார்த்திக் போலீசாகவும் மிரட்டும் இந்த படத்தின் முதல் பாதியை கன்னட படத்தை இயக்கிய நார்த்தன்தான் இயக்குகிறார். இரண்டாம் பாதியை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியாகி இப்போது வரை யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், விவேக் வரிகளில் பாடல் காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வரும் இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் வெளியீடு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது படக்குழு. இந்த தினத்தில் இல்லை என்றால் அடுத்து 21ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் பத்து தல படத்தின் புரமோசன் பணிகள் துவங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து வரிசையாக அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


மார்ச் 15ம் தேதி அளவில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். மேலும் மார்ச் 21ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதுவரை தாமதமானாலும் இனி வாரம் ஒரு அப்டேட் கிடைத்துக் கொண்டிருக்கப் போகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Updated On: 14 Feb 2023 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  3. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  10. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்