/* */

சரக்கடித்துக்கொண்டு ஆடிய நானி, கீர்த்தி சுரேஷ்! முகம் சுளித்த ரசிகர்கள்...!

தசரா படத்தில் சரக்கு பாட்டிலை ஒரே கல்ப்பில் அடிக்கும் போட்டி நானிக்கு இருக்கும். அதே வகையில் இந்த புரமோசன் நிகழ்ச்சியின்போதும் நானியை செய்து காட்ட சொன்னார்கள். நானியும் அதைப் போலவே செய்து காட்டினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொது மேடையில் இப்படி குடிக்கலாமா என்று பொங்கி எழுந்தனர்.

HIGHLIGHTS

சரக்கடித்துக்கொண்டு ஆடிய நானி, கீர்த்தி சுரேஷ்! முகம் சுளித்த ரசிகர்கள்...!
X

மும்பையில் நடந்த புரமோசன் விழாவில் தசரா படத்தில் நடித்த நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் குடித்துவிட்ட நடனமாடியதாக தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.


ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் தசரா. இந்த படத்தில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களது நடனத்தில் மச்சினி பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. எஸ் எல் வி சினிமாஸ் தயாரிப்பில் இந்த படம் மொத்தம் 5 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.


தசரா படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் தவிர பல தமிழ் முகங்களும் இருக்கின்றன. அதில் முக்கியமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவரது இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தூம் தாம் எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் குடித்துவிட்டு ஆடியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தசரா படத்தில் சரக்கு பாட்டிலை ஒரே கல்ப்பில் அடிக்கும் போட்டி நானிக்கு இருக்கும். அதே வகையில் இந்த புரமோசன் நிகழ்ச்சியின்போதும் நானியை செய்து காட்ட சொன்னார்கள். நானியும் அதைப் போலவே செய்து காட்டினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொது மேடையில் இப்படி குடிக்கலாமா என்று பொங்கி எழுந்தனர்.


மேலும் அவருடன் கீர்த்தி சுரேஷும் நடனமாடினார். இதனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களுக்கும் அதே பாட்டிலை வழங்கினார்கள். சிலர் பாட்டிலை வேகமாக வாங்கியும் சிலர் தயங்கி தயங்கியும் நிற்க, அதன்பிறகு தான் தெரியவந்தது அதில் சரக்கு எதுவும் இல்லை வெறும் குளிர்பானம்தான் இருந்தது என்பது. இதன் பிறகு அனைவரும் குளிர்பானத்தை பருகி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியையும் கோலாகலமாக நடத்தினர். இந்த விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், நானி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Updated On: 22 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்