சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீ ராமநவமி விழா

திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீ ராமநவமி விழா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது

Update: 2022-04-10 13:24 GMT

சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீராமநவமி தினமான இன்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் 2.4.2022 முதல் தொடங்கி இன்று வரை ஸ்ரீ ராமநவமி விழா நடைபெற்றது இந்த நாட்களில் காலையில் வால்மீகி ராமாயண மூல பாராயணமும் மாலையில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியும்நடைபெற்றது

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீ. உ. வே. யதீந்திர கனபாடிகள், ஸ்ரீ மகேஷ் பட் ஆகியோர் பாராயணம் செய்தனர். 6.4.22 முதல் இன்று வரை மாலையில் சொல்லின் செல்வர் பி.என். பரசுராமன் அவர்கள், "திருப்புகழில் ராமாயணம் " என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஸ்ரீராமநவமி தினமான இன்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரம நிர்வாகி நீதியரசர் ஆர். எஸ். ராமநாதன் கூறுகையில்,  கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த அன்னதானம் தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக மீண்டும் வருகின்ற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 முதல் நண்பகல் 12 மணிக்கு தினமும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News