கோவையில் திமுக முப்பெரும் விழாவுக்கு அமைச்சர் அழைப்பு

கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவுக்கு, தொண்டர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-06-12 02:29 GMT

அமைச்சர் எ.வ.வேலு (கோப்பு படம்)

ஜூன் 15 அன்று கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்கு, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டநிர்வாகிகள், தோழர்கள் அலைகடலென திரள்வீர் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் , பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு விடுத்துள்ள அறிக்கை; 

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 8ஆம் தேதியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி

முன்னாள் முதல்வர் கருணாநிதி  நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிளும் வெற்றி அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கட்சியை  வழிநடத்தி சென்ற  தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா அறிவிக்கப்பட்டது.

ஜூன் 15 சனிக்கிழமை அ ன் று  கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக முதல்வர், திமுக தலைவர்.ஸ்டாலின் தலைமையில் கூட்டனி கட்சி தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

எனவே திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட  நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர்  நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள், கிளை மற்றும் வட்ட நிர்வாகிகள் மற்றும்  முன்னோடிகள் அலை கடலென திரண்டு வந் து , கோவை முப்பெரும் விழாவினை சிறப்பித்திட கேட்டுக்கொள்கிறேன் என்று கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், திருவண்ணாமலை மாவட்டம்  செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News