திருவண்ணாமலை நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் துவக்கம்

திருவண்ணாமலை நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தினை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.

Update: 2024-03-08 01:42 GMT

கூட்டு குடிநீர் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 55.49 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா அடிக்கல் நாட்டு விழா திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட தேனிமலை பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன்,  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு, கலந்துகொண்டு கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார் .அப்போது அவர் பேசியதாவது,

திருவண்ணாமலை நகராட்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒரு நகராட்சியாகும். திருவண்ணாமலை நகரத்திற்கு நாளுக்கு நாள் ஆன்மீக பக்தர்களின் வருகை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நாளுக்கு நாள் அதிகம் அனுபவித்து வருகிறார்கள்.

மறைந்த தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. 13 ஆண்டுகளைக் கடந்து தற்போது 30 சதவீத மக்கள் அதிகமாக உள்ளார்கள்.

ஆன்மீக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீரின் தேவையும் அதிகரித்து வருகிறது.இந்த கூட்டு குடிநீர் நான்காவது திட்டத்தில் 2.80 கோடி லிட்டர் தண்ணீர் அதாவது ஒரு நபருக்கு 135 லிட்டர் பயன்படுத்தும் அளவிற்கு தமிழ்நாடு முதல்வரால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை நகர மன்ற உறுப்பினர்களிடம் தான் முதலில் கூறுவார்கள், திராவிட மாடல் ஆட்சியில் நகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழ்நாடு முதல்வர் பார்த்து பார்த்து செய்து வருகிறார் .திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் வந்ததற்கு பிறகுதான் தமிழ்நாட்டின் நான்கு வழி சாலைகள் அதிகம் போடப்பட்டுள்ளது.

தேனிமலை அண்ணாநகர் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்த பிறகு தேவையான அனைத்து சாலைகளும் போடப்படும் என்றும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பவர் முதல்வர் என்றும் அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News