திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தலைமை நீதிபதி மகாதேவன் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தலைமை நீதிபதி மகாதேவன் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-26 14:50 GMT

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மகாதேவன் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் பொறுப்பு ஏற்று உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர்  இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபுர்வாலா கடந்த 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதைதொடர்ந்து மூத்த நீதிபதியான மகாதேவனை பொறுப்பு நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இன்றுகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட நீதிபதி மதுசூதனன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் வரவேற்றனர். முதலில் அண்ணாமலையார் சன்னதி, பின்னர் உண்ணாமுலையம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News