ஐடிஐ சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்..!

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு

Update: 2024-05-27 01:06 GMT

தொழில் பயிற்சி நிலையம், பைல் படம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இன்று இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 -2025 ஆம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க www.skilltraining.tn.gov.in என்ற இனிய தளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் ஜூன் 7 ம் தேதி அன்று முடிவடைய உள்ளது விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 ஆகும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

வயதுவரம்பு 14 முதல் அரசு நிர்ணயித்தவாறு இருக்கலாம்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் , சாதி சான்றுகள், ஆதார் அட்டை ,முன்னுரிமை சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம், இமெயில் ஐடி மற்றும் கைபேசி எண் , அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருவண்ணாமலை, அரசு தொழில் பயிற்சி நிலையம் செய்யாறு, அரசு தொழில் பயிற்சி நிலையம் ஜமுனாமரத்துவர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி உதவி மையத்திற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் வந்து தொழில் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு தொழிற் பிரிவுகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News