மழையின் போது மின் சாதனங்களை தொடாதீர்கள் : மின்வாரிய அலுவலர் எச்சரிக்கை..!

மழையின் மின் சாதனங்களை தொடவேண்டாம் என பொதுமக்களுக்கு மின்சார வாரிய அலுவலர்கள் பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

Update: 2024-05-27 01:37 GMT

பைல் படம்

மழையின்போது மின் சாதனைகளை தொடாதீர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை மின் பகிர்மானக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது விபத்துகளை தடுக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மின்சார வாரிய அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.

மேற்பார்வை பொறியாளர் அலுவலக அலுவலர் வெளியிட்ட செய்தி செய்தி குறிப்பில்

மின் விபத்துக்கள் ஏற்படாத வகையில் மக்களுக்கு எச்சரிசியுடன் இருப்பது அவசியம். கவனக்குறைவு காரணமாக மின்விபத்துக்கள் குறிப்பாக நடக்கிறது. வீட்டில் துணி காய போடுவதற்காக கட்டும் கயிறு மீது மின் ஒயர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் விபத்துக்கள் ஏற்படும்.

கம்பிகளோ அல்லது இழுவை கம்பிகளாலோ ஆடு மாடுகளை கட்டுவது தவறு. அதேபோல் உங்கள் வீட்டில் துணி காய போடுவதற்கு கட்டும் கயிறு மீது எந்த மின் வயரும் உரசாமல் கவனத்தோடு இருங்கள். விழாக் காலங்களில் மின்கம்பத்திலோ அல்லது மின் பாதை கீழ்ப்பகுதியிலோ பேனர் ,  தட்டிகள் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாமல் இருங்கள்.

சவ  ஊர்வலத்தின் போது பூ மாலைகளை மின்கம்பி மீது எரிய வேண்டாம். மழை மின்னல் காற்று காலங்களில் மின் சாதனங்களை தொடாமல் எச்சரிக்கையாக இருங்கள். மின் மாற்றிகளிலோ அல்லது மின் கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் மின் வாரியா அலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள். 

கட்டிட பணி மேற்கொள்ளும் போது கவன குறைவாக தளவாடங்களை கையாளுதல், இரும்பு கம்பிகள் மின்பாதை கம்பிகளின் உரசி மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர வயல்வெளிகளின் மின் வேலி அமைத்தால் அங்கு செல்லும் நபர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.  விலங்குகளும் உயிரிழந்துள்ளன.  மழை நீர் தேங்கியுள்ள தெருக்களில் உள்ள மின் மாற்றிகளின் வேலி அருகே செல்ல வேண்டாம்.

மேலும் பழுதடைந்த மின்சாதனங்களை பயன்படுத்தும் போது மின் கசிவு ஏற்பட்டும்.  இதை கருத்தில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ சான்றுகள் உள்ள மின் சாதன பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்துங்கள் ,  சாலையில் மின்கம்பிகள் அறுந்துகிடந்தால் அதனைத் தொடக்கூடாது என்றும், உடனே 94987 94987 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும். இவ்வாறு  திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News