மாற்றுத்திறனாளிகள் -அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் அமைச்சர் வழங்கல

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவிகள், அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்

Update: 2022-01-14 06:15 GMT

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 28.49 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களை மாற்றுத்திறனாளிளுக்கு வழங்கினார். 

மேலும் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 16.43 லட்சம் மதிப்பில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி.

கூடுதல் ஆட்சியர் பிரதாப் , இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையாளர் கஜேந்திரன் , அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News